செய்திகள்

புதிய தொடரில் மீண்டும் இணையும் எதிர்நீச்சல் நடிகர்கள்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த நடிகர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த நடிகர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சொக்கத் தங்கம் தொடரில் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் தர்ஷன் கேரக்டரில் நடித்த நடிகர் ரித்திக் ராகவேந்திரா, ஜான்சிராணி கேரக்டரில் நடித்த காயத்ரி அதுபோல கரிகாலன் கேரக்டரில் நடித்த விமல் குமார் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவா தலையா தொடரில் நடித்த நடிகர் பாண்டி கமல், ஸ்வேதா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் சில சின்னத்திரை பிரபல நடிகர்களும் இந்த புது தொடரில் நடிக்க உள்ளனர்.

சொக்கத் தங்கம் தொடரை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் செவ்வந்தி தொடரை தயாரித்திருந்தது. அதுவும் சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது.

எதிர்நீச்சல் தொடரில் ஜான்சிராணியும், கரிகாலனும் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும், இவர்களின் நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதிலும் கரிகாலனின் நகைச்சுவை கலந்த பேச்சு பலரைக் கவர்ந்தது.

இதேபோன்று தர்ஷன் பாத்திரத்தில் நடித்த ரித்திக் ராகவேந்திராவுக்கும் ரசிகைகள் கூடியுள்ளனர்.

இதனால், சொக்கத் தங்கம் தொடரில் என்ன மாதிரியான பாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

SCROLL FOR NEXT