செய்திகள்

விடுதலை - 2 முதல் பார்வை போஸ்டர்!

DIN

விடுதலை - 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்  விஜய் சேதுபதி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை - 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விடுதலை - 2 படத்தின் முதல் 2 தோற்றப் போஸ்டர்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் நீக்கதால் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்: டி.கே. சிவக்குமார்

காணும் பொங்கல்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்த வெள்ளி! கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சம்!!

SCROLL FOR NEXT