அல்லு அர்ஜுன் படங்கள்: எக்ஸ்
செய்திகள்

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்! புஷ்பா 2 வெளியாவதில் தாமதம்?

நடிகர் அல்லு அர்ஜுன் சுற்றுலா சென்றுள்ளதால் புஷ்பா 2 வெளியாவதில் தாமதம் ஏற்படுமென ரசிகர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

DIN

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா - 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்குவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதில் தாடியை டிரிம் செய்துள்ளதாக ரசிகர்கள் விடியோ வெளியிட்டுள்ளார்கள். மேலும் ஒரு மாதம் படப்பிடிப்பு தள்ளிப்போனால் போஸ்ட் புரடக்‌ஷன் புரமோஷன் என வெளியாவதில் சிக்கல் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டில் வெளியாகாவிட்டால் டிசம்பரில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

ஜோதி தரிசனம்... சிம்ரன் தாஸ்!

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT