எஸ்.ஜே.சூர்யா படம்: யூடியூப் / ராயன் டிரைலர்
செய்திகள்

ராயபுரத்தின் ஓநாய்..! ஒரேயொரு நாளில் டப்பிங் பணிகளை முடித்த எஸ்.ஜே.சூர்யா!

ராயன் திரைப்படத்துக்காக ஒரே ஒரு நாள் டப்பிங் முடித்ததாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

மார்க் ஆண்டனி படத்தில் டப்பிங் பேசி குரலே பாதித்துவிட்டஹு. ஆனால் ராயன் படத்தில் ஒரேயொரு நாள்தான் டப்பிங் செய்தேன். எனக்கான காட்சிகள் பெரும்பாலும் முக பாவனைகளில் மட்டுமே இருக்கும்.

ராயபுரத்தின் ஓநாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நேரடியாக எதையும் செய்ய மாட்டேன். ஆனால் மறைமுகமாக எல்லாப் பிரச்னைகளையும் செயல்படுத்தும் கதாபாத்திரம். அதற்கேற்ப நடித்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT