எஸ்.ஜே.சூர்யா , நானி. 
செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளில் தெலுங்கு பட டீசர்! நடிகர் நானி, படக்குழுவினர் வாழ்த்து!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளில் சூர்யாவின் சாட்டர்டே படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, விக்ரம் 62 (வீர தீர சூரன்) படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தனுஷின் 50ஆவது படமான ராயனில் நடித்துமுடித்துள்ளார். இன்னும் பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தனது 56ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

நடன இயக்குநரும் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பை நிறுவி மக்களுக்கு உதவி செய்துவருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதை தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நானியுடன் நடிக்கும் சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சாட்டர்டெ - தமிழில்) படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இதில் நானி எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்படி காட்சிகள் உள்ளது சுவாரசியமாக இருக்கின்றன. இது டீசர் அல்ல என்ற தலைப்புடன் படக்குழு கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் ஆக.29 வெளியாகிறது. பான் இந்திய படமாக ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT