மீனாட்சி பொண்ணுங்க தொடரின் போஸ்டர் எக்ஸ்
செய்திகள்

முடிகிறது மீனாட்சி பொண்ணுங்க தொடர்!

மீனாட்சி பொண்ணுங்க தொடர் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், விரைவில் இத்தொடர் முடிவடையவுள்ளது.

DIN

மீனாட்சி பொண்ணுங்க தொடர் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், விரைவில் இத்தொடர் முடிவடையவுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் மீனாட்சி பொண்ணுங்க.

கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வைக்கப் போராடுகிறார். அதற்கு 4 மகள்களும் துணைபுரிந்து பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இதுவே மீனாட்சி பொண்ணுங்க தொடரின் மையக்கதை.

நடிகை செளந்தர்யா ரெட்டி

இத்தொடரில் நடிகை செளந்தர்யா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்துவருகிறார்.

இவர்கள் மட்டுமின்றி, பிரனிகா தக்‌ஷு, சசிலயா, ஆனந்த் மெளலி, சுபத்ரா, பிரபாகரன், சுகன்யா, ஹேமாதயாள், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மீனாட்சி பொண்ணுங்க தொடருக்கு ஹரன் பிரசன்னா திரைக்கதை எழுத, முத்துக்குமாரசாமி இயக்குறார்.

2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், 500 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. காதல், பாசம், சூழ்ச்சி என அனைத்துவிதமான உணர்வுகளுக்கும் முக்கியதுவம் கொடுத்து மீனாட்சி பொண்ணுங்க தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

செளந்தர்யா ரெட்டி - ஆர்யன்

இதனிடையே மீனாட்சி பொண்ணுங்க தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகன் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT