முதல் படம்: விபத்தில் பலியான ஏழுமலை. 
செய்திகள்

ஜூலை - 25 படப்பிடிப்புகள் ரத்து!

DIN

படப்பிடிப்புகளில் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் பொருட்டு பெப்சி அமைப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.

நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டை காட்சியை திரைப்படக் குழுவினா், படமாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை படக் குழுவினா் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிறிது நேரத்தில் இறந்தாா்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி படப்பிடிப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.முன்னதாக, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படப்பிடிப்பில் கயிறு அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

இந்த நிலையில், தொடர்ந்து சண்டைக் கலைஞர்கள் மற்றும் லைட் மேன்கள் படப்பிடிப்புகளில் உயிரிழந்து வருவதால், நாளை மறுநாள் (ஜூலை 25) சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளை தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் முறையாக பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 25 அன்று சென்னை கமலா திரையரங்கில் நடத்த உள்ளனர்.

அன்றைய நாள் சென்னையில் நடைபெறும் பெரிய திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT