அந்தகன் போஸ்டர், சந்தோஷ் நாராயணன்.  
செய்திகள்

நான் இசையமைத்த பாடலில் மாற்றம்: சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை!

அந்தகன் இசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு வைரலாகியுள்ளது.

DIN

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 

2021இல் படப்பிடிப்பு தொடங்கி 2022இல் முடிக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக்கொண்டார். அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ரவி யாதவ், வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். 

இந்நிலையில் இதன் தீம் பாடல் சமீபத்தில் வெளியானது. இது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “இசை, பாடல் வரிகள், மிக்ஸிங், இசைக்கோர்வைகள் எதுவும் நான் அமைத்தது மாதிரி இல்லை” எனக் கூறியுள்ளார். வடிவேல் மீம் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி கிண்டல் செய்துள்ளார்.

ரசிகர்கள் இது குறித்து, “என்ன சொல்றீங்க சார்?” என கமெண்ட்டுகளில் குழப்பமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தவெக மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

இசைக்கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

SCROLL FOR NEXT