அது இதுதான்... வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!
இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் அடுத்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது, 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ‘அடுத்த அப்டேட்.. 3-வது பாடல்’ என உறுதிப்படுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.