இவர்கள் தொல்லை தாங்கவில்லை..! யுவன் பகிர்ந்த கிண்டல் பதிவு!
இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விஷ்ணு வரதனை கிண்டல் செய்யும் பாணியில் இசையமைப்பாளர் யுவன் பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது, 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இவர்கள் தொல்லை தாங்கவில்லை” எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணு வரதன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.