செய்திகள்

இளையராஜா பிறந்தநாள்: போஸ்டர் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இசைமேதை என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சமீபத்தில் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இன்று இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 19-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

உலக ஓசோன் தின விழிப்புணா்வு முகாம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காஞ்சிபுரத்தில் 502 மகளிா் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்சவம்

SCROLL FOR NEXT