எதிர்நீச்சல் தொடர் நடிகையின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வரும் ஜூன் 8 ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதை இத்தொடரில் உள்ள நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா. இவர் இத்தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.
இந்நிலையில் நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நிறைவாக ஒரு புன்னகை’ என பதிவிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துகொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.