செய்திகள்

ரஷியாவில் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரி!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசைக் கச்சேரி ரஷியாவில் நடைபெற உள்ளது.

DIN

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சமீபத்தில் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

நேற்று (ஜூன்.2) இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உள்பட உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஆனால், பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, “என் பிறந்தநாளுக்கு நீங்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறீர்கள். ஆனால், என் மகளைப் பறிகொடுத்ததால் எனக்கு இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டாம் இல்லை.” எனக் கூறினார்.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த ரஷியத் துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் பத்திரிகையாளர்களிடம், “இளையராஜா ரஷியாவின் நண்பர். இந்தப் பிறந்தநாளில் அவரை நேரில் வாழ்த்த வந்தேன். மாஸ்கோவில் ஜூலை மாதம் இளையராஜாவின் சிம்பொனி இசைக் கச்சேரியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அங்குள்ள ரஷிய இசைக்கலைஞர்களை வைத்தே இக்கச்சேரி நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT