ஹிந்தி சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.
இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், “ வெற்றிகள் படைப்பு சுதந்திரத்தை அழித்து விடுகின்றன. முந்தைய திரைப்படம் வெற்றி பெற்றால் மீண்டும் அதேபோல் எடுக்க முயற்சிக்கிறார்கள். ஹிந்தி திரைப்படங்களில் ஃபார்முலாக்கள் வைத்து எடுக்கப்படும் படங்கள் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதேபோல் முயற்சித்து மோசமான படைப்புகளாக வெளிவருகின்றன.
மராத்தி சினிமாவில் சைரத் திரைப்படம் ரூ.100 கோடியை வென்றது. அப்போது எனது நண்பர் நாகராஜ் மஞ்சுளேவிடம் ‘இனிமேல் மராத்தி சினிமா இருக்காது. அனைவரும் கதைகளை சொல்வதை விடுத்து ரூ.100 கோடியை நோக்கி ஓடுவார்கள்’ எனக் கூறினேன். ஹிந்தி சினிமாக்களும் இப்படியாகத்தான் ஆகின்றன. இயக்குநர்கள் நல்ல படங்களை எடுக்காமல் பணத்தினைத் தேடி ஓடுகிறார்கள்.
தற்போது ஹிந்தி சினிமாக்கள் தரமான படங்களை எடுப்பத்தில் கவனம் செலுத்தாமல் 500-800 கோடி ரூபாயை எப்படி சம்மாதிப்பது என்பதில்தான் நோக்கமாக இருக்கிறார்கள். ஒரு படம் அதிகமாக வசூலித்தாலே இயக்குநர்கள் தங்களது அடுத்தப் படங்களில் முட்டாளாகி கதைகளை தியாகம் செய்யவேண்டியுள்ளது” என்றார்.
அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.