முகப்பு
செய்திகள்

ஜெயிலர் - 2 படத்தில் பாலகிருஷ்ணா?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜெயிலர் - 2 படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்.

Updated On : 6 ஜூன், 2024 at 12:31 PM
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

இதனால், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காசோலை வழங்கியதுடன் சொகுசுக் கார்களையும் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயத்தையும் பரிசாகக் கொடுத்தார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் நெல்சன் இருக்கிறார். இதற்கான, நடிகர்கள் தேர்வு, கதை விவாதம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்திற்குப் பின் ஜெயிலர் - 2 படத்தில் இணைவார் என்றும் தகவல்.

ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்ததால் படத்தின் வணிக வெற்றி பல மடங்காக உயர்ந்தது.

இந்த நிலையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்கும் முயற்சியில் நெல்சன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இருந்தால், தெலுங்கில் பெரிய வசூலைப் பெற முடியும் என்பதால் இந்தத் திட்டமாம்!

முழு கட்டுரையைப் படிக்க →