ஆப்பிள் நிறுவனத்தை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ் வைரலான நிலையில், அதற்கு தமிழ் நடிகர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மிக முன்னணி சமூக தளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்குக்கு நன்றி தெரிவித்து தமிழ் நடிகர் டிவீட் செய்திருக்கிறார்.
உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர்மாற்றம் செய்து, பரபரப்பைக் கூட்டியவர். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர்.
அவ்வப்போது, உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கிண்டல் செய்யும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவுகளை செய்வதை வழக்கமாக கொண்டவர்.
அதுபோலத்தான் ஓபன் ஏஐ பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வரும் புகார்கள் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்து வெளியான மீம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சி பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பதிவால் மகிழ்ச்சி அடைந்த தப்பாட்டம் படத்தின் நடிகரும் - தயாரிப்பாளருமான துரை.சுதாகர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். தப்பாட்டம் திரைப்படத்தின் காட்சி அடங்கிய மீம்ஸை பதிவிட்டிருப்பதற்கு அவர் நன்றி சொல்லியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.