செய்திகள்

40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்த டியர் காம்ரேட்! ராஷ்மிகா கூறியதென்ன?

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் யூடியூப்பில் மட்டுமே 40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.

DIN

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் யூடியூப்பில் மட்டுமே 40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.

கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீத கோவிந்தம்' படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பின்னர் இந்தக் கூட்டணி டியர் காம்ரேட் படத்திலும் இணைந்தார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பரத் கம்மா இயக்கத்தில் 2019இல் வெளியான திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கில் வெளியான இப்படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அமேசான் ஓடிடியில் இருக்கிறது.

இதன் ஹிந்தி டப்பிங் யூடியூப்பில் கோல்ட் மைன்ஸ் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டு 40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது. இது குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், “

2019 வெளியீட்டின்போது சோகமாக இருந்தோம். ஆனால் தற்போது வரை இந்தப் படத்துக்காக அளவற்ற அன்பு கிடைத்து வருகிறது. மிகவும் பிடித்த படம் டியர் காம்ரேட்” எனக் கூறியுள்ளார்.

ராஷ்மிகா இதனைப் பகிர்ந்து , “400 மில்லியன் லவ். டியர் காம்ரேட் எப்போதும் எனக்கு சிறப்பான படம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 , சிக்கந்தர் படங்களில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா பெயரிடப்படாத 2 படங்களில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT