முகப்பு
செய்திகள்

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

செய்திகள்

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

Updated On : 17 ஜூன், 2024 at 8:13 AM
பகிர்:

இயக்குநர் அட்லி - நடிகர் சல்மான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.

ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி புதிய படத்தில் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. காரணம், ஜவான் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இதனால், அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது, அப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் அட்லி நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சல்மான் கான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →