முகப்பு
செய்திகள்

யக்‌ஷினியாக மாற 3 மணி நேர மேக்கப்! விடியோ வெளியிட்ட வேதிகா!

நடிகை வேதிகா தனது புதிய இணையத் தொடரின் கதாபாத்திரத்துக்காக 3 மணி நேரம் ஒப்பனை செய்யவேண்டியிருந்ததென விடியோ வெளியிட்டுள்ளார்.

Updated On : 19 ஜூன் 2024, 7:26 pm IST
பகிர்:

நடிகை வேதிகா தனது புதிய இணையத் தொடரின் கதாபாத்திரத்துக்காக 3 மணி நேரம் ஒப்பனை செய்யவேண்டியிருந்ததென விடியோ வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை வேதிகா. தமிழில் 2006இல் மதராஸி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். முனி, சக்கரகட்டி, மலை மலை, பரதேசி படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

கடைசியாக தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 4 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. தமிழில் விநோதன், பேட்ட ராப், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் முதல்முறையாக இணையத் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். யக்‌ஷினி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடரினை தேஜா மர்னி இயக்கியுள்ளார். ராம் வம்சி கிருஷ்ணா எழுதியுள்ள இந்தத் தொடரில் வேதிகா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் உள்ள இந்தத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்த யக்‌ஷினி கதாபாத்திரத்துக்காக நடிகை வேதிகா 3 மணி நேரம் மேக்கப் போடுவதாகவும் அதனை நீக்க 2 மணி நேரமும் ஆகின்றதெனக் கூறியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு, “பாதுகாப்பான கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை, ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதில்லை, அழகான கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை. யக்‌ஷினியில் மாயா கதாபாத்திரத்துகாக 3 மணி நேரம் மேக்கப் போடுவேன், அதைக் கலைப்பதற்கு 2 மணி நேரமாகும். சிகையலங்காரம், ஒப்பனை கலைஞர்களுக்கு பாராட்டுகள்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments