செய்திகள்

சூரியின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா?

DIN

நடிகர் சூரி நடிக்கவுள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் கதைநாயகனாக நடித்தார். இப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கூடிய நாயகனாக மாறியுள்ளார்.

விடுதலை, கருடன் வெற்றிகளைத் தொடர்ந்து சூரி அடுத்தது எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சூரியின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு இணையத் தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் சிகரெட், 120 கி.மீ. வேகம்! எச்சரித்த கார்.. இறுதியில் 4 இளைஞர்கள் பலி! விடியோ

அதிமுக, இபிஎஸ் பெயரைக் குறிப்பிடாத டிடிவி தினகரன்! இபிஎஸ்ஸும்...

டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ: இந்திய ரயில்வே ஒப்புதல்!

ஜப்பானின் முன்னாள் பிரதமரை சுட்டவருக்கு ஆயுள் தண்டனை!

SCROLL FOR NEXT