செய்திகள்

ஏ. ஆர். முருகதாஸ் - சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

DIN

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை நடிகர் விஜய்-க்கு கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினையே பெற்றது.

அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே 23’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே, எதிர்பாராதபடி பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து படம் இயக்குவதாக ஏ.ஆர். முருகதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் படத்துக்கு சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 2025 ரமலானுக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பக்ரீத் அன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT