செய்திகள்

தீபாவளிக்கு விடாமுயற்சி!

DIN

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.

துணிவு வெளியாகி ஓராண்டைக் கடந்த நிலையில், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பிலேயே இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர்கள் அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின், படத்தைக் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

சமீபத்தில் நடிகர் அர்ஜுன், “விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் அஜர்பைஜனில் துவங்கும் என்றும் 20 - 30 சதவீத படப்பிடிப்பே மீதமுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் விரைவில் மீண்டும் அஜர்பைஜனில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது, நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்.ஐ.சி. முதுநிலை மேலாளா் கொலைக்கு காரணம் என்ன?

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தது அமமுக!

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; இது பங்காளிச் சண்டைதான்! - டிடிவி தினகரன்

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

SCROLL FOR NEXT