நடிகை ருக்மணி வசந்த் 
செய்திகள்

நடிகை ஆகாவிட்டால் ஆசிரியை பணி! ருக்மணி வசந்த் பகிர்ந்த சினிமா அனுபவங்கள்!

நடிகை ருக்மணி வசந்த் கன்னடத்தில் உருவான சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

DIN

நடிகை ருக்மணி வசந்த் கன்னடத்தில் உருவான சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழிலும் நடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் படத்தில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும் நடிக்கிறார்.

சப்த சாகரதாச்சே எல்லோ பட போஸ்டர்.

சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ருக்மணி வசந்த் பேசியதாவது:

தற்போது தென்னிந்திய படங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகை பார்வதி ஒரு முறை கன்னட படம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் அவரது மொழி பிரயோகங்கள் அசலான கன்னட நடிகையைப் போலவே இருந்தது. அவரது நேர்காணலைப் பார்த்த பிறகு நானும் அவரைப் போலவே எந்த மொழிப் படங்களில் நடித்தாலும் அதில் சிறப்பாக பேச வேண்டுமென முயற்சிக்கிறேன்.

விஜய் சேதுபதி உடன் ருக்மணி வச்ந்த்.

படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார். விஜய் சேதுபதி, இயக்குநர் ஆறுமுக குமார் மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டுமென மெனக்கெடுவார்கள்.

எனக்கு படங்கள் சரியாக அமையாவிட்டால் மான்டிச்சோரி (விளையாட்டுமுறை கல்வி கற்பிக்கும் குழந்தைகள்) பள்ளி ஆசிரியையாக திட்டம் இருந்தது. ஆனால் தற்போது அது தேவைப்படாதென நினைக்கிறேன் என்றார்.

தற்போது நடிகை ருக்மணி வசந்த தமிழில் 2 படங்கள், கன்னடத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT