சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழு மலை!
Updated On : 23 ஜூன், 2024 at 12:01 PM
இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
Advertisement
தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி உள்ளது.
சமீப காலமாக சில தமிழ்ப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.