இந்தியன் - 2 யோசிக்க வைக்கும்: ஷங்கர்
இந்தியன் - 2 திரைப்படம் ரசிகர்களை யோசிக்க வைக்கும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.
இந்த நிலையில், இன்று நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Advertisement
அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், “என் படங்களில் இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்பதே கதையாக இருக்கும். இந்தியன் - 2 படம் இந்தியன் தாத்தா இப்போது வந்தால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றித்தான். இப்படத்திற்கா நடிகர் கமல்ஹாசன் கடுமையாக உழைத்திருக்கிறார். 70 நாள் படப்பிடிப்பில் தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்வது சாதாரணமானது அல்ல.
ஒப்பனையைக் கலைக்கவும் அதிக நேரமெடுக்கும். சண்டைக் காட்சிகளிலும் தீவிரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இந்தியன் திரைப்படம் தமிழகத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகியிருந்தது. இந்தியன் - 2 திரைப்படம் இந்தியளவில் நடக்கும் பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. கண்டிப்பாக, இந்தியன் - 2 ரசிகர்களை யோசிக்க வைக்கும். ” எனக் கூறினார்.