செய்திகள்

ஜெயம் ரவியை அன்ஃபாலோ செய்த ஆர்த்தி!

DIN

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி இணை விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரவி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி என அழைக்கப்படுகிறார். இவருக்கும் ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வார். இதன் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.

இந்த நிலையில், ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தது. ஆனால், ஆர்த்தி ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வாழ்த்துகள் தெரிவித்து இக்குழப்பத்திற்கு பதில் கொடுத்தார்.

இருப்பினும், தற்போது ஆர்த்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியதுடன் அவரைப் பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். மேலும், தன் மகன்களுடன் இருக்கும் படங்களையும் நீக்கியிருக்கிறார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நல்ல இணை என கொண்டாடப்பட்ட ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே என்ன பிரச்னை? ஏன் ஆர்த்தி இப்படி நடந்துகொள்கிறார்? எனக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று வரும் சூழலில் இக்கேள்விகளுக்கு இன்னும் இருவரும் பதிலளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் ஆர்த்தி மட்டுமே ஜெயம் ரவியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். ஆனால், ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியைப் பின்தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT