இந்த வாரம் ஓடிடியில் வெளியான உலகத் திரைப்படங்கள், தொடர்கள்!
வார இறுதியை கொண்டாட்டமாக்க ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்!
இணைய வழி திரையிடலான ஓடிடியில் இந்த வாரம் வெளியாகியுள்ள ஹாலிவுட், கொரியன் மற்றும் பாலிவுட் படங்கள் குறித்த சுருக்கமான அறிமுகம் இதோ.
சிவில் வார்
கற்பனையான அமெரிக்க உள்நாட்டு போரை மையமாக கொண்ட கதை. போர்க் காட்சிகள், சண்டை படங்கள் விரும்புவர்களுக்கு வார இறுதியில் நல்ல விருந்தாக அமையும் படம். ஏப்ரலில் வெளியான இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
சாவேஜ் பியூட்டி சீசன் 2
இணைய தொடரான சாவேஜ் பியூட்டி இரண்டாவது சீசன் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அழகுச் சாதன தொழில் புரியும் கோடீஸ்வர குடும்பத்தை மர்மான பெண் பழிவாங்கும் கதை.
தி வெர்ல்விண்ட்
கொரிய படமான தி விர்ல்விண்ட், அதிபரின் மரணத்தையொட்டிய நிகழும் சுவாரசியமான அரசியல் திரைப்படம். கொரிய படங்களின் ரசிகர்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள படத்தை காணலாம்.
ஏ பேமிலி அஃபேர்
தாயும் மகளும் சந்திக்கும் காதல் சந்தர்ப்பங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ஏ பேமில் அஃபேர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இலகுவாக பார்க்கக் கூடிய படமென்றாலும் 18+ பார்வையாளர்களுக்கு மட்டுமானது.
ரவுது கா ராஸ்
பார்வை சவால் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியின் காப்பாளர் அவரது அறையில் மர்மாக இறந்து கிடக்கிறார். இது குறித்து விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் தீபக் நேகி வருகிறார். காவலர் நவாசுதீன் சித்திக். என்ன நடந்தது என்பதுதான் கதை. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஷர்மாஜி கி பேட்டி
ஷர்மா என்கிற பின்னொட்டு கொண்ட மூன்று வெவ்வேறு பெண்களின் கதை. ஹிந்தி படமான இது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.