செய்திகள்

‘தனுஷ் 54’ படத்தினை இயக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்?

நடிகர் தனுஷின் 54வது படத்தினை மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

நடிகர் தனுஷின் 54வது படத்தினை மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை.  இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

வேகமாக ரூ.100 கோடி வசூலித்த மலையாளத் திரைப்படமாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கமல், உதய்நிதி, தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் உள்பட பல தமிழ் சினிமா பிரபலங்களை படக்குழு சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிலையில் தனுஷின் 54வது படத்தினை மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தப் படத்தினை கோபுரம் சினிமாஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் 50வது படம் ராயன், 51வது படம் டிஎன்எஸ் எனும் தெலுங்கு படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 52,53வது படங்கள் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரியவில்லை.

வெற்றிமாறன், செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் அரசியல்? - சரத் பவார் பதில்!

தங்கமே தங்கமே பாடல்!

ஜன.30-ல் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா!

4-வது டி20: இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT