செய்திகள்

விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் ஜே பேபி உள்ளிட்ட 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்து வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், யோகிபாபு நாயகனாகவும் இனியா நாயகியாகவும் நடித்து வெளியான ‘தூக்குதுரை’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(மார்ச். 8) வெளியாகவுள்ளது.

சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’, அமேசான் பிரைமில் மார்ச் 8-ல் வெளியாகிறது. மேலும், தமிழ் படமான நந்திவர்மன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் , எனக்கு எண்டே கிடையாது திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிறது.

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஹார்ட் பீட் இணையத் தொடர். இந்தத் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்ச் 8 ஆம் தேதி இத்தொடர் வெளியாகவுள்ளது.

ஹனுமான் திரைப்படம் மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

விதார்த், பூர்ணா நடிப்பில் வெளியான டெவில் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும், யாத்ரா 2 அமேசான் பிரைமிலும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT