செய்திகள்

பூடானில் மாளவிகா மோகனனின் அஞ்சல் தலை!

நடிகை மாளவிகா மோகனனின் அஞ்சலை தலையை பூடானில் வெளியிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகை மாளவிகா மோகனனின் அஞ்சலை தலையை பூடானில் வெளியிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார். தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது.

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தற்போது பூடானுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பூடானில் தனது அஞ்சலை தலை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பூடானில் உள்ளூர் அஞ்சல் நிலையம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தும் விதமான வசதி ஒன்றிருக்கிறது. அதன்படி உங்கள் புகைப்படமிருந்தால்போதும் அதனை பூடான் நாட்டின் அஞ்சல் தலையாக அச்செடுத்துக் கொள்ளலாம்.

தங்கலான் ரிலீஸ் என்பதால் நான் ‘ஆரத்தி’ அழியாமல் இருக்க அஞ்சல் தலையாக்கினேன். இந்த நாளில் கொடுமையான, மிகவும் வலுவான ஒரு பெண் கதாபாத்திரத்தினை இந்தாண்டு திரையரங்குகளில் நீங்கள் பார்க்கப்போவதற்கு உங்களை வாழ்த்துகிறேன். அதிகாரம், ஆள் பலம், ஆளுமை உடைய அந்தப் பெண்ணைப் போல ஒவ்வொரு குட்டிப் பெண்களும் (சிறுமிகள் கிடையாது) பார்த்து ஊக்கத்தையும் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன்.

மகளிர் தின வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT