செய்திகள்

ஆஸ்கர் விழா - நிர்வாணமாக மேடையேறிய ஜான் சீனா!

நடிகர் ஜான் சீனா ஆஸ்கர் விருது விழாவில் நிர்வாணமாக மேடையில் தோன்றியது கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், நடிகர் உள்பட 7 விருதுகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

10 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’கில்லர்ஸ் ஆஃப் பிளவர் மூன்’ திரைப்படம் எந்த விருதையும் பெறாதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் ஆஸ்கர் விழாவில் நடந்துள்ளது. விருதை அறிவிக்கும் முன் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர் விழாவில் நிர்வாணமாக ஓடிவந்த நடிகரைக் குறிப்பிட்டு பேசி, அதேபோல் இப்போதும் யாராவது தோன்றினால் எப்படியிருக்கும்? எனக் கேள்வியெழுப்பினார்.

இவர் பேசி முடித்தபோது, சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வழங்க வந்த ஜான் சீனா விருதாளர் பெயர் உள்ள அட்டையை இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி நிர்வாணமாக மேடையில் தோன்றினார்.

இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் கூச்சலிட்டு சிரித்தனர். அந்தத் தோற்றத்திலேயே, "ஆடைகள் என்பது மிக முக்கியமானது” என சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது புவர் திங்ஸ் படத்திற்குக் கிடைத்ததாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT