செய்திகள்

ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்த வானத்தைப் போல தொடர்!

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8.30 மணிக்கு வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடர் ஆயிரம் நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடர் சின்னத்திரைகளுக்கான டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடத்தில் நீடித்து வருகிறது.

பெரும் வரவேற்புக்கு மத்தியில் தற்போது வானத்தைப் போல தொடர் ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8.30 மணிக்கு வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. ஸ்ரீகுமார், மான்யா, அஷ்வந்த் கார்த்தி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வானத்தைப் போல தொடர் கடந்த 2020 டிசம்பர் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதல் 5 இடங்களில் ஒன்றாக வானத்தைப் போல தொடர் நீடித்து வருகிறது.

வானத்தைப்போல தொடரில் முன்பு நடித்த அண்ணன் - தங்கை

குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் எதிர்நீச்சல், சிங்கப்பெண்ணே தொடர்களை பின்னுக்குக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.

வானத்தைப்போல தொடரில் முன்பு நடித்த அண்ணன் - தங்கை

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள வானத்தைப் போல தொடர், டிஆர்பியிலும் நல்ல புள்ளிகளைப் பெற்று வருகிறது.

ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்திவிடும் நிலையில், வானத்தைப்போல தொடர், தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT