இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள். 
செய்திகள்

ஒரே நாளில் நிறைவடைந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள்!

இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் ஒரே நாளில் நிறைவடைந்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் ஒரே நாளில் நிறைவடைந்துள்ளன.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று நீண்ட நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் அண்மையில் நிறைவடைந்தன.

இலக்கியா

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இலக்கியா தொடர் 985 எபிசோடுகளுடன் நிறைவடைதது.

இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நந்தன் லோகநாதன், ஷாம்பவி குருமூர்த்தி நடித்துவந்தனர்

பரபரப்பான திருப்புமுனைக் காட்சிகளுடன் இலக்கியா தொடர் கடந்த ஜன. 14 ஆம் தேதி நிறைவு பெற்றது.

ஆனந்த ராகம்

நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடித்து வந்த தொடர் ஆனந்த ராகம். இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது.

பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஜன. 14 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் தொடர், 1043 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.

The serials Ilakkiya and Anandha Ragam, which were being broadcast on Sun TV, have concluded on the same day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமது இதயங்கள்

எட்டுத் தொகையில் அறம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

உணவு டெலிவரிக் கதைகள் (நாகரிக வாழ்வில் நவீனச் சுரண்டல்)

சமூக ஜனநாயகக் கையேடு

SCROLL FOR NEXT