சின்னதிரை
சன் டி.வி.யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கயல்'.
சன் டி.வி.யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கயல்'. ஹீரோவாக சஞ்சீவும், அவருக்கு ஜோடியாக சைத்ராவும் நடித்து வந்தனர். சன் டி.வி. தொடர்களிலேயே டி.ஆர். பி. ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் தொடராக இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் கடந்த சில மாதங்களாகவே ஹீரோ சஞ்சீவ் தொடர்பான காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாக காட்டப்பட்டு வருகிறது. என்ன நடந்தது? சஞ்சீவ் இனி சீரியலில் வருவாரா? 'கயல்' யூனிட் வட்டாரத்தில் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாகவே அவர் சீரியல்ல இருந்து வெளியேறி இருக்கார்னு சொல்றாங்க. அவருக்கு நெருக்கமான ஓரிருவைத் தவிர மத்த யாருக்கும் டீடெய்லா என்ன நடந்ததுனு தெரியல. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு முறை ஒரு பஞ்சாயத்து ஆச்சு. அதன் தொடர்ச்சியா அடுத்த சில தினங்கள்ல இருந்து சஞ்சீவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதில்ல' என்கிறார்கள் அவர்கள்.
Advertisement
Advertisement
ஜெயா டி.வி. யில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியைப் பார்த்தோம்' என்று சொன்ன பெண்களையெல்லாம் அப்போது பார்த்திருப்பீர்கள். இந்தியில் 'கோன் பனேகா க்ரோர்பதி' தமிழில் 'கோடீஸ்வரன்' ஆகிய நிகழ்ச்சிகளின் வரிசையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மீண்டும் புது வடிவம் பெற்று, அதே ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
கடந்த சில தினங்களாக 'குழப்பத்தில் குஷ்பு' என்ற விளம்பரம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்ததே, அது இந்த நிகழ்ச்சியினுடையதுதானாம். பாஜகவில் அளிக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தீவிர அரசியலிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாத குஷ்புவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சின்னதிரைக்கு அழைத்து வந்திருக்கிறது ஜெயா டிவி.
ஜீ சேனல் குழுமத்துக்கு இது 100-ஆவது ஆண்டு. அதைக் கொண்டாடும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களில் விழா எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் சார்பாகவும் அதற்கான விழா நடந்தது.
சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், பிரசாந்த, ஆர்யா, விஜய் ஆண்டனி, கலையரசன், நடிகை ராதிகா என பெரிய திரையிலிருந்தும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர் நடிகைகள், ஆரம்ப காலத்திலிருந்து சேனலுடன் பயணித்தவர்கள் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.