சின்னதிரை
புதுப் புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்குத் தொடர்ந்து பொழுதுபோக்கை அளித்து வரும் ஜீ தமிழ், இப்போது இரு புதிய நிகழ்ச்சிகளைக் களமிறக்கியிருக்கிறது.
புதுப் புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்குத் தொடர்ந்து பொழுதுபோக்கை அளித்து வரும் ஜீ தமிழ், இப்போது இரு புதிய நிகழ்ச்சிகளைக் களமிறக்கியிருக்கிறது. ஒருபக்கம் இசை ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் 'சரிகமப'வோட புதிய சீசன். இன்னொரு பக்கம் கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற 'மாஸ் பசங்க விஸஸ் கிளாஸ் பொண்ணுங்க'.
இவ்விரு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், 'சரிகமப' நிகழ்ச்சியின் நடுவர்கள் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா, 'மாஸ் பசங்க விஸஸ் கிளாஸ் பொண்ணுங்க' நிகழ்ச்சி நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய உருண்டு புரண்டு மகன்களுடன் உற்சாகமாக விளையாடினார் ஆல்யா மானசா. மகனின் பிறந்த நாளை ஒரே நிறத்தில் ஆடை அணிந்து நண்பர்களுடன் கொண்டாடிய விடியோக்கள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. சின்னதிரை நட்சத்திரத் தம்பதியான ஆல்யா மானசா, சஞ்சீவ். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கார்த்திக் - செம்பாவாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.
Advertisement
Advertisement
ரியல் ஜோடியாக சொந்த வாழ்க்கையில் இணைந்த இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் அர்ஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் பிறந்தும் இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர். இப்போது மகனின் பிறந்த நாளை கடற்கரையில் குடும்பத்தினர் ஒரே நிற டிசைனில் ஆடைகளை அணிந்து கொண்டாடியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.