சின்னதிரை
ஜெயா டி.வி. 28-ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இயங்கி வந்ததால் சன் டி.வி. ஆரம்ப காலத்தில் திமுக ஆதரவு சேனல் போலச் செயல்பட்டு வந்தது.
ஜெயா டி.வி. 28-ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இயங்கி வந்ததால் சன் டி.வி. ஆரம்ப காலத்தில் திமுக ஆதரவு சேனல் போலச் செயல்பட்டு வந்தது. ரீச் அதிகமாக இருந்தது என்பதாலும், சன் டி.வி.க்குப் போட்டியாக ஒரு சேனலைத் தொடங்க நினைத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜெ. ஜெ. டி.வி.யைத் தொடங்கினார். ஆனால், லைசென்ஸ் உள்ளிட்ட சில விவகாரங்களில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, ஜெ. ஜெ. டி.வி. மூடப்பட்டது. பின்னர், ஜெயா டி.வி. என்கிற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இந்தச் சேனல் 27 ஆண்டுகளைக் கடந்து 28-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு புத்தம் புதிதாக சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி முன்பு ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற குஷ்பு தொகுத்து வழங்கும் 'ஜாக்பாட்' மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டி.வி.யின் அதிகாரபூர்வ இசைக் கலைஞரான டி.ஜே. பிளாக்குக்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் டி.ஜே.வாக முக்கியப் பங்காற்றி வரும் இவரது உண்மையான பெயர் சுதன்குமார். இதனை தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் மியூசிக் கான்சர்ட்களில் இவர் பங்காற்றியிருக்கிறார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசுவதற்கேற்ப சரியான டைமிங் பஞ்ச் போடுவது இவருடைய பலம். இன்று சின்ன திரையில் அதிகம் ரசிக்கப்படும் ஒருவராகவும் இவர் மாறியிருக்கிறார்.
விஜய் டி.வி.யின் 'குக் வித் கோமாளி' ஷோ நடுவர் செஃப் தாமு அண்மையில் ஒளிபரப்பப்பட்டசீசன்-7 செமி பைனலில் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது உடல்நலம் குறித்து வதந்திகள் பரவிய நிலையில், செஃப் தாமுவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக விடியோ வெளியிட்டிருக்கும் அவர், 'கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் செமி ஃபைனலில் பங்கேற்கமுடியவில்லை' என விளக்கம் அளித்திருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.