FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சின்னதிரை: பிக்பாஸ் காமன் மேன்

விஜய் டி.வி.யில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது.

Updated On : 19 ஜூலை 2026, 9:41 pm IST
பகிர்:

விஜய் டி.வி.யில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார். வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல், இந்த வருடம் நிகழ்ச்சியில் சில மாற்றங்களைப் புகுத்தவிருக்கிறார்களாம்.

முந்தைய சீசன்களில் சினிமா, டி.வி. நட்சத்திரங்கள், மாடலிங் ஆள்களுடன் பிரபலமல்லாத சாதாரண நபர்களும் போட்டியாளர்களாகப் பங்கேற்று வந்தனர். இவர்கள் பெரும்பாலும் விஜய் டி.வி.யில் பணிபுரியும் ஊழியர்களின் நட்பு வட்டத்திலிருந்தோ அல்லது முந்தைய சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பார்கள்.

இந்த நிலையில், இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே 'பிக்பாஸ் காமன் மேன்' என்ற ஒரு ஷோவை நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு 'பிக் பாஸ் காமன் மேன்' ஷோவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியின் முடிவில் பெர்ஃபார்மன்ஸை வைத்து சிறந்த சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments