பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு காமன்மேன்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் இருந்து மீண்டும் ஒரு போட்டியாளர் நுழைந்துள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் இருந்து மீண்டும் ஒரு போட்டியாளர் நுழைந்துள்ளார்.
வைல்ட் கார்டு போட்டியாளர்களாக 3 பேர் நுழைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர் அனுப்பப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. 4 வது வாரத்தின் முடிவில் அஸ்மிதாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த சவின்யாவும் தன்யாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த ஜாவேத்தும் வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
லட்சுமி பிரியாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த குமரன், தாமாகவே போட்டியில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டு பிக் பாஸ் போட்டியில் தொடர்கிறார்.
இந்நிலையில், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 3 பேர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், சின்ன திரை நடிகை அக்ஷிதா ஆகியோருடன் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரீஷ்மா ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன், அக்ஷிதா ஆகிய இருவரும் மக்கள் மத்தியில் ஏற்கெனவே பிரபலமானவர்களாக உள்ள நிலையில், காமன்மேன் பிரிவில் கரீஷ்மா உள்ளே நுழைந்துள்ளார்.
ஏற்கெனவே காமன்மேன் பிரிவில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷமா, முனியம்மா, ஜேசன், மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் மணிவண்ணன் மட்டும் வெளியேறிய நிலையில், மற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது கரீஷ்மாவும் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
commonman karishma wild card entry Bigg boss 10
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.