FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் காமன்மேன் ஜேசன் நடித்த திரைப்படம் எது தெரியுமா?

காமன்மேன் பிரிவில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜேசன் நடித்துள்ள திரைப்படம் குறித்து...

ஜேசன் - படத்தில் / பிக் பாஸ் நிகழ்ச்சியில்... - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் பங்கேற்றுள்ள ஜேசன் திரைப்படம் ஒன்றில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், திரைப்படத்தில் நடித்த ஜேசன் காமன்மேன் பிரிவில் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒன்று முதல் 14 வரை வரிசையாக தூண்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் தாங்கள் எந்த இடத்துக்கு தகுதியானவர்கள் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

முதல் இடத்துக்கு டிடிஎஃப் வாசன், ஜேசன், அடாவடி அன்சர், அவினாஷ், தன்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முதலிடத்துக்கு தகுதியற்ற நபர் என சக போட்டியாளர்கள் விவாதம் செய்ததால், தன்யா கீழே இறங்கிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து டிடிஎஃப் வாசன் - ஜேசன் இடையே முதலிடத்துக்கு கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில், தான் காமன்மேன் பிரிவில் இருந்து வந்ததாகவும், கைதட்டுவதற்கு கூட்டத்தை வெளியே கூட்டிவைத்துவிட்டு வரவில்லை எனவும் கூறியிருந்தார்.

ஆனால், ஜேசன் உண்மையாகவே காமன்மேன் இல்லை என்று அவர் நடித்த படத்தின் காட்சிகளை இணையத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நெஞ்சு பொறுக்குதில்லையே படத்தில்..

ஜேசன் நடித்த படம்

காமன்மேன் பிரிவில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜேசன், நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இருவர் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே படத்தில்...

ஜேசனுடன் அரவிந்த் ரியோ, புவனேஸ்வரி, நித்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2024 டிசம்பர் 27 ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Do you know which film Bigg Boss commoner Jason acted in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments