தொடரும் நட்பு! ஒன்றாக சந்தித்த பிக் பாஸ் 10 பிரபலங்கள்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது தொடர்பாக ஷமா பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இடையில் 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதில், ஜேசன், முனியம்மாள், டிடிஎஃப் வாசன், ஷாதிகா, முகேஷ், அடாவடி அன்சர், வினோத் பாபு, லட்சுமி பிரியா, பிருத்வி, தன்யா என 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். எஞ்சியவர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டனர். ராகவ், பிளாக் பாண்டி உள்ளிட்டோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாண்டி, ராகவ், ஷமா, மணிவண்ணன், கரீஷ்மா ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நேரலையை பார்ப்பதற்காக அரங்கிற்கு இவர்கள் ஒன்றாக வருகைப்புரிந்தனர். அங்கு ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், முரண்கள் இருந்தாலும் வெளியே நிஜ வாழ்க்கையில் அனைவரும் நட்பு பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.