FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடிகர் அவினாஷ் மகனை கொஞ்சி விளையாடும் பிக் பாஸ் ஷமா!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவினாஷ் இல்லத்திற்கு சக போட்டியாளர் ஷமா சென்றுள்ளார்.

26 வினாடிகள் முன்பு
அவினாஷ் மகனுடன் ஷமா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவினாஷ் இல்லத்திற்கு சக போட்டியாளர் ஷமா சென்றுள்ளார். அங்கு அவரின் மகனை கொஞ்சி விளையாடும் விடியோவை ஷமா பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் அவினாஷ் வெளியேறினார். அவருடன் நடிகை முத்தழகியும் வெளியேற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை, இதற்கு முன்பு வெளியேரிய ஷமா நேரில் சென்று சந்தித்து வருகிறார். அந்தவகையில் நடிகர் அவினாஷ் இல்லத்துக்கு ஷமா சென்றுள்ளார். அங்கு அவரின் மகனுடன் கொஞ்சி விளையாடி குடும்ப உறுப்பினர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.

அவினாஷின் மகனுடன் கொஞ்சி விளையாடும் விடியோவை ஷமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குட்டி அவி என அவரைக் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் பிரதிநிதியாக ஷமா பங்கேற்றிருந்தார். இதுவரை இல்லாத வகையில் சிறப்பான பெண் போட்டியாளராக வெளியேறினார். காமன்மேனில் இருந்து இனி பிக் பாஸுக்கு யார் சென்றாலும், ஷமா முன்னோடியாக விளங்குவார் என பிக் பாஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Bigg boss 10 Shama plays affectionately with Avinash's son

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.