FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸில் இருந்து வெளியேறி குழந்தைகளைப் பார்ப்பேன்! நடிகை அஸ்மிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மிகுந்த நிறைவுடனே வெளியேறுவதாக நடிகை அஸ்மிதா தெரிவித்துள்ளது குறித்து...

அஸ்மிதா - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மிகுந்த நிறைவுடனே வெளியேறுவதாக நடிகை அஸ்மிதா தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் தான் வெளியேறியது மகிழ்ச்சி என்றும், தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்று எனது 3 குழந்தைகளைப் பார்க்கப்போகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தின் இறுதியில் அக்‌ஷிதாவைத் தொடர்ந்து நடிகை அஸ்மிதா வெளியேறினார்.

Advertisement

Advertisement

அவர் வெளியேறும்போது நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அவரை கண்ணீர் மல்க கட்டி அணைத்து ஆறுதல் கூறி வழியனுப்ப முயன்றனர். ஆனால், அதனை ஏற்றுக்கொண்ட அஸ்மிதா, தான் அழுதுகொண்டு வெளியேற விரும்பவில்லை என்றும், மகிழ்ச்சியுடனே பிக் பாஸ் வீட்டில் இருந்து புறப்படுவதாகவும் கூறினார்.

கடந்த வாரம் மற்ற போட்டியாளர்களை விடவும் சிறந்த ஆட்டத்தை வழங்கிய நிறைவுடன் செல்வதாகவும், தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்று தனது 3 குழந்தைகளை பார்க்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது திரை உலகப் பயணம் குறித்துப் பேசிய அஸ்மிதா, எல்லாமே அதுவாக நடக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.

பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு போட்டியாளருக்குமே இல்லாத வளர்ச்சி, குறுகிய காலத்தில் அஸ்மிதாவுக்கு ஏற்பட்டுள்ளதாக பிக் பாஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Bigg boss 10 tamil I will see my children once I’m out of Bigg Boss Actress Asmitha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.