செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய நடுவர் இவர்தான்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசனின் புதிய நடுவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இம்முறை இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்.

கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார். ஆனால், சமையல் கலைஞர் தாமு இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

இதனிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாக முன்னதாக தெரிவித்தது.

இந்த நிலையில், வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் புதிய நடுவராக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் மெஹந்தி சர்கஸ், பென்குவின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT