செய்திகள்

மேம்பட்ட தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் ‘அழகி’ திரைப்படம்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி.

DIN

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. மறைந்த பாடகி பவதாரிணி பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் மிகவும் வைரலான பாடலாகும்.

பழைய தமிழ்ப் படங்கள் ரீரிலிஸாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகி திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

22 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருவதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் வரும் மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் மறுவெளீயீட்டு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT