DOTCOM
DOTCOM
செய்திகள்

இளையராஜா பயோபிக் அப்டேட்!

DIN

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். 

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இதற்கிடையே, நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. காரணம், இளையராஜா தனிப்பட்ட முறையிலேயே தனுஷின் நடிப்புத் திறனை விரும்புகிறவராம்.

இந்த நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்கு வர்த்தகம் சரிவு: ரூ.2 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

SCROLL FOR NEXT