DOTCOM
செய்திகள்

‘என் மனைவியைப் பற்றி பேச வேண்டாம்..’: லோகேஷ் கனகராஜ்

தன் மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

DIN


ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்த ‘இனிமேல்’ பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.

இந்த விடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

லோகேஷிடம், “நீங்கள் நடித்ததைப் பார்த்து உங்கள் மனைவி என்ன சொன்னார்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, லோகேஷ் கனகராஜ், “ஆரம்பத்திலிருந்தே நான் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளைத் தவிர்த்தே வருகிறேன். அதைப் பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவுக்கு வந்ததிலிருந்து எனக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டும் இருந்தால்போதும் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுவில் கொண்டுவர விருப்பமில்லை.” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT