பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
2010இல் ரன் படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகராக அறிமுகமானவர் ராஜ்குமார் ராவ். இவர் நடித்த அலிகார், டிராப்ட், ஷாகித், நியூட்டன், பதாய் டூ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீட் (2023) படம் கரோனா காலகட்ட நெருக்கடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக டிரைலரில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் பயோப்பிக்கில் நடிக்கவிருக்கிறார். ஸ்ரீகாந்த் பொல்லா கண்பார்வை குறைபாடுடன் பிறந்து பல போரட்டங்களைத் தாண்டி படித்தவர். கேம்ப்ரிட்ஜில் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்த முதல் சர்வதேச மாணவர் ஆவர். அமெரிக்காவில் வேலைக் கிடைத்தும் இந்தியாவில் புதிய திட்டங்களுடன் களமிறங்கினார்.
2012இல் பொல்லாண்ட் தொழிற்சாலையை நிறுவினார். இவரது வாழ்க்கை வரலாற்றில் ராஜ்குமார் நடித்து வருகிறார். இதனை இயக்குகிறார் துஷார் ஹிரநந்தனி. டி சீரிஸ் தயாரிக்கும் இந்தப் படம் வரும் மே 10ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் ஜோதிகா, அல்யா எஃப், ஷரத் கேல்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா ஹிந்தியில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான சைத்தான் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.