நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!
நடிகர் அஜித் குமார் பிறந்தநாளையொட்டி அவருக்கு இருசக்கர வாகனத்தைப் பரிசளித்திருக்கிறார் ஷாலினி.
விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் அஜித், குட் பேட் அக்லி படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இரு படப்பிடிப்புகளில் அஜித் கலந்துகொள்வார் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு திரைப்பிரலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
தற்போது, நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பிறந்தநாள் பரிசாக தன் கணவருக்கு டுகாட்டி வகை இருசக்கர வாகனத்தைப் பரிசளித்துள்ளார். அந்த பைக்கின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.