செய்திகள்

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

பிரபல மலையாள நடிகை அன்னா ராஜன் தனது நோய் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

DIN

மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ் எனும் படத்தில் லிச்சி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். பின்னர் மோகன் லாலுடன் நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ரண்டு, திரிமலி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

உடல்பருமனை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்தது குறித்து வருத்தமடைந்துள்ளார். இது குறித்தும் தனக்கு இருக்கும் நோய் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அங்கமாலி டையாரிஸ் படத்தில்..

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னா ராஜன் கூறியாதவாது:

என்னுடைய உடல்நலன் குறித்து அக்கறை எடுத்துகொண்ட அனைவருக்கும் நன்றி. உடை, வெப்பம் காரணமாக எனது நடன அசைவுகள் குறைவாக இருக்கின்றன. அதே சமயம் நான் தொழில்முறை நடனக் கலைஞர் கிடையாது. ஆனால் நடனம் பிடிக்கும். எனது சிறந்தவற்றை நான் முயற்சிக்கிறேன். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த தடைகளும் இல்லாமல் நடனம் ஆட விரும்புகிறேன்.

எனது சூழ்நிலையை கருதி எனக்கு ஆதரவு தாருங்கள். கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் அன்னா ராஜனின் பதிவு.

இந்த விடியோவுக்கு உருவகேலி செய்யும் வகையில் கமெண்ட் வரவே அதற்கு ஸ்டோரியில் பதிலளித்து இருந்தார் அன்னா ராஜன். அதில் அவர் கூறியதாவது:

என்னையோ அல்லது எனது விடியோவோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் கருத்தினை சொல்லாம். ஆனால் மோசமாக கூறுவது என்னை பாதிக்கிறது. எனது அசைவுகள் பல காரணங்களால் தடைபடுகின்றன. எனது உடல் சில நாள்கள் ஒல்லியாகவும் சில நாள்கள் உடல் பருத்தும் காணப்படுகிறது. தைராய்டு பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். மூட்டு வலி, பருமன் போன்ற பல பல சிக்கல்களை அனுபவிக்கிறேன். 2 ஆண்டுகளாக இந்த நோயினால் போராடுகிறேன். வீட்டில் எதுவுமே செய்யாமல் வெறுமனே இருக்க முடியவில்லை. எனக்கும் இந்த உலகத்தில் இடம் இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விலகி சென்றுவிடுங்கள்; மோசமாக கமெண்ட் செய்யாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

இது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. கடைசியாக 2022இல் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

SCROLL FOR NEXT