‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!
பிரேமலு படத்தின் மூலம் கவனம் பெற்ற நாயகன் தள்ளுமாலா இயக்குநர் படத்தில் நடிக்கிறார்.
காலித் ரஹ்மான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘தள்ளுமாலா’ படம் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தினை இரண்டு முறை பார்த்த்தாகக் கூறினார். அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் பிடித்த்தால் அனிமல் படத்தில் அவருடன் பணியாற்றினேன் என்றார்.
நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவான திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
தற்போது பிரேமலு நாயகன் நஸ்லன் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளான் பி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தள்ளுமாலா இயக்குநர் படம் என்பதால் மலையாளம், தமிழ் ரசிகர்கள் இருவருமே இந்த அறிவிப்பினால் ஆர்வமாகியிருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.